"தமிழ்நாட்டின் பெருமை" - அஸ்வினை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


தமிழ்நாட்டின் பெருமை -  அஸ்வினை பாராட்டிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

உங்களது பங்களிப்பை இது உரக்கப் பேசுகிறது. உங்களது அபார கிரிக்கெட் கேரியரில் இதுபோல மென்மேலும் சாதனைகள் வர உள்ளன' என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது . இருப்பினும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் அஸ்வின் அஸ்வின். இதன்மூலம் ஐசிசி பவுலர்களின் தரவரிசையில் 869 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஸ்வினை பாராட்டியுள்ளார்.

'தமிழ்நாட்டின் பெருமை. கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இதற்கு நீங்கள் தகுதியானவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களது பங்களிப்பை இது உரக்கப் பேசுகிறது. உங்களது அபார கிரிக்கெட் கேரியரில் இதுபோல மென்மேலும் சாதனைகள் வர உள்ளன' என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story