உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் விளையாட மாட்டோம் - மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்....! வங்காளதேசத்திற்கு மாற்ற திட்டம் ?
போட்டியை இலங்கை அல்லது வங்காளதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துபாய்,
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டியை இலங்கை அல்லது வங்காளதேசத்தில் நடத்த வலியுறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் முடிவு செயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாட முடியாது. எனவே ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா அறிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த பிரச்சினை குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகள் இடையே பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்தில் ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்க சென்ற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளின் வாரிய நிர்வாகிகள் சந்தித்து நடத்திய ஆலோசனையில் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும், இந்திய அணி மோதும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பைக்காக பிசிசிஐ இந்தியஅணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால், உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரதில் முடிவு செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
பாகிஸ்தான் விளையாடும் உலகக் கோப்பை போட்டியை இலங்கை அல்லது வங்காளதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..இதனால் பிசிசிஐ க்கு புதிய பிரச்சனை ஏற்பட்ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விளையாடும் ஆட்டத்தை நடுநிலையான இடத்திற்கு மாற்ற வலியுறுத்துவதால் இது குறித்து விவாதம் நடந்து வருகிறது.