குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அகமதாபாத்,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி தலா 3 வெற்றியை பெற்றுள்ளன. 4-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும் இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிப்பது கடினமானதாகும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலில் ஆடுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனலாம்.
Related Tags :
Next Story