2023 உலகக்கோப்பை தொடரில் இருந்தும் விலகும் ரிஷப் பண்ட்..?
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த பண்ட் சிகிச்சைக்கு பின் தற்போது மெல்ல குணமடைந்து வருகிறார்.
இதனால், ரிஷப் பண்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்து கிரிக்கெட் விளையாட இன்னும் 8முதல் 9 மாதங்கள் ஆகும் என்றும் இதனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story