டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: பயிற்சியின் போது ரோகித் சர்மாவுக்கு காயம்..! ரசிகர்கள் அதிர்ச்சி
காயத்தை தொடர்ந்து அவர் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லண்டன்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இதையொட்டி ஒரு வாரத்திற்கு மேலாக இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மாவின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , காயத்தை தொடர்ந்து அவர் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த காயம் பெரிய அளவிலான காயம் இல்லை எனவும் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Rohit Sharma has got stuck in his left thumb while batting at the nets. (Reported by OneCricket). pic.twitter.com/XYTKh7TYyd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 6, 2023
Rohit Sharma is fine, there is no injury scare. [@Vimalwa] pic.twitter.com/lgDzecnjxl
— Johns. (@CricCrazyJohns) June 6, 2023