திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் ரோகித் சர்மா சாமி தரிசனம்


திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் ரோகித் சர்மா சாமி தரிசனம்
x

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பதி,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தாயகம் திரும்பினார் . இதனை தொடர்ந்து நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கு அவர் தயாராகி வருகிறார் .ஆசிய கோப்பை போட்டியில் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் .இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story