இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை பாண்டியாவிடம் ரோகித் சர்மா ஒப்படைக்க வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து
இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடம் ரோகித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனை தொடர்ந்து இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் மூத்த வீரர்கள் கே.எல்.ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார் . இந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றது.மேலும் , இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, தான் அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த'நிலையில் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை ஹார்திக் பாண்டியாவிடம் ரோகித் சர்மா ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
ஹார்திக் பாண்டியா உம்ரான் மாலிக்கை நன்றாக பயன்படுத்தினார் .அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்துள்ளார்.ரோஹித் சர்மாவின் சாதனைகள் அவர் சிறந்த கேப்டன் எனபதை காட்டுகிறது.
அதேநேரம், தோனி எப்படி டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்தாரோ, அதேபோன்று ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை பாண்ட்யாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
என்று கூறியுள்ளார்.