எஸ்.ஏ. டி20 லீக்: சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பந்துவீச்சை தேர்வு செய்தது
எஸ்.ஏ 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. எஸ்.ஏ. 20 ஓவர் லீக் தொடரின் இறுதிபோட்டியில் வெயின் பார்னல் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 19.3 ஓவர்களில் 10 விக்கட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் ரோலோப் வான் டெர் மெர்வே 4 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 136 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 16.2 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன் பட்டம் வென்றது.