மழையால் டெல்லி - கொல்கத்தா இடையேயான போட்டி தொடங்குவதில் தாமதம்

மழையால்  டெல்லி  - கொல்கத்தா இடையேயான போட்டி  தொடங்குவதில் தாமதம்
x

மழை தொடர்ந்து பெய்தால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் டெல்லியில் இன்று இரவு நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டிகான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு போட்டி நடைபெறும் என அறிவிப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்தால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.

Next Story