கேன் வில்லியம்சனுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை..! விரைவில் குணமடைய விராட் கோலி வாழ்த்து


கேன் வில்லியம்சனுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை..! விரைவில் குணமடைய விராட் கோலி வாழ்த்து
x

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கேன் வில்லியம்சன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.

சென்னைக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்டபோது கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரண்டாம் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரவில்லை. அவரது காயம் அதிகமானதை தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்து இருந்து விலகினார்.

இதையடுத்து அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கேன் வில்லியம்சன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் விரைவில் குணமடையுங்கள் என விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார் .



Next Story