அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு..!


அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு..!
x

Image Courtesy: @ICC 

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 7ம் தேதி ஹராரேவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்;

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேக் எர்வின், ட்ரெவர் குவாண்டு, லூக் ஜோங்வே, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, பிராண்டன் மவுடா, கார்ல் மும்பா, டோனி முனியோங்கா, பிளெஸிங் முசரபானி,ரிச்சர்ட் ங்வாரா, சீன் வில்லியம்ஸ்.


Next Story