ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக்கும் - ரோகித் ஷர்மா


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருக்கும் - ரோகித் ஷர்மா
x

இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது

நாக்பூர்,

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது, இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரை கைப்பற்றினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி இதை கைப்பற்ற தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரை யார் கைப்பற்றுவார், யார் தொடர் நாயகன் விருது பெறுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் டெஸ்ட் தொடர் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியதாவது,

தொடரில் விளையாட நான்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளன, நாங்கள் தொடரை வெல்ல விரும்புகிறோம். இது ஒரு சவாலான தொடராக இருக்கும், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள், நன்றாகச் செயல்படுகிறார்கள், மேலும் அணியில் சிலரை விட்டுவிடுவது கடினம். நாங்கள் தைரியமான முடிவுகளை எடுப்போம்.

ஆனால், எல்லா வீரர்களும் சிறப்பாகச் செயல்படுவதும், தேர்வுக்கான வாய்ப்போடு இருப்பதும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல அறிகுறி. ஆனால் நிலைமைகளைப் பார்த்து அதற்கேற்ப அணிகளைத் தேர்ந்தெடுப்போம். வெவ்வேறு ஆடுகளங்களுக்கு வெவ்வேறு திறன்கள் தேவைப்படும். என்றார்


Next Story