இந்திய அணி சிறப்பான தொடக்கம்..! உணவு இடைவேளை வரை 121/0
உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது
போர்ட் ஆப் ஸ்பெயின்,
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டொமினிகாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்கியது
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிதானமாக விளையாடினர். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இருவரின் விக்கெட்டை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சாளர்கள் போராடி வருகின்றனர்.
உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 63 ரன்களும் , ஜெய்ஸ்வால் 52 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.