கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கியது
தொடக்க விழாவையொட்டி ஆடல் , பாடல் என கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
மும்பை,
முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் ஆடும்.
இந்த போட்டிக்கான தொடக்க விழாவையொட்டி ஆடல் , பாடல் என கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்னர் 5 அணிகளின் கேப்டன்கள் இனைந்து பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை அறிமுகப்டுத்தின.
The moment we were all waiting for!
— Women's Premier League (WPL) (@wplt20) March 4, 2023
# pic.twitter.com/sqPBJjWw7A