திரும்பும் இடமெல்லாம் மஞ்சள் படை..! ஈடன் கார்டன் மைதானத்தை ஆக்கிரமித்த சி.எஸ்.கே. ரசிகர்கள்..!


திரும்பும் இடமெல்லாம் மஞ்சள் படை..! ஈடன் கார்டன் மைதானத்தை ஆக்கிரமித்த சி.எஸ்.கே. ரசிகர்கள்..!
x

போட்டி ஈடன் காடர்ன் மைதானத்தில் நடைபெற்றாலும் சேப்பாக்கத்தில் நடைபெறுவது போல சென்னை அணிக்கு ஆதரவு இருக்கிறது.

கொல்கத்தா,

16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங்செய்து வருகிறது.

இந்த போட்டி கொல்கத்தா ஈடன் காடர்ன் மைதானத்தில் நடைபெற்றாலும் சேப்பாக்கத்தில் நடைபெறுவது போல சென்னை அணிக்கு ஆதரவு இருக்கிறது.

மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது. மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களே அதிக அளவு நிரம்பி இருந்தனர். இந்த புகைப்படங்களை பகிர்ந்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story