டிஎன்பிஎல் - சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு


டிஎன்பிஎல்  - சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு
x

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


Next Story