டிஎன்பிஎல்: திருச்சி அணியை வீழ்த்தி சேலம் அபார வெற்றி


டிஎன்பிஎல்: திருச்சி அணியை வீழ்த்தி சேலம் அபார வெற்றி
x

சேலம் 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

நத்தம்,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி, சேலம் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மறுபுறம் திருச்சி அணியின் மணி பாரதி நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். அவர் 40 ரன்களில் வெளியேறினார்

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு139 ரன்கள் எடுத்தது. சேலம் அணியில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 140ரன்கள் இலக்குடன் சேலம் விளையாடியது.

தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி சேலம் அணி ரன்கள் குவித்தது.சேலம் அணியில் அதிரடியாக ஆடிய கௌசிக் காந்தி 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.

இதனால் சேலம் 15.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதனால் சேலம் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

திருச்சி அணி விளையாடிய 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது .


Next Story