டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர்
20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 5விக்கெட் இழப்பிற்கு 173ரன்கள் எடுத்தது
சேலம்,
8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.. டி.என்.பி.எல். தொடரின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு நடக்கிறது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதல் சிறப்பாக ஆடியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய துஷார் ரஹேஜா 30 ரன்கள் , சாய் கிஷோர் 45 ரன்கள் , விஜய் ஷங்கர் 43 ரன்கள் குவித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடுகிறது .