நார்வே நாட்டு நடன குழுவுடன் இனைந்து நடனம் ஆடிய விராட் கோலி..! வைரல் வீடியோ


நார்வே நாட்டு நடன குழுவுடன் இனைந்து நடனம் ஆடிய விராட் கோலி..!  வைரல் வீடியோ
x

விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான ‘குயிக் ஸ்டைலை’ சந்தித்து அவர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது . இருப்பினும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது .4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 186 ரன்கள் அடித்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த நிலையில் 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான தொடர் முடிந்த பின்னர் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான 'குயிக் ஸ்டைலை' சந்தித்து அவர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.

இது தொடர்பான அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில்,

"நான் மும்பையில் யாரைச் சந்தித்தேன் என்று யூகிக்கவும்" என்றும் தெரிவித்துள்ளார் .

தற்போது விராட் கோலியின் நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story