நாங்கள் தோல்விக்கு தகுதியானவர்கள் தான் - விராட் கோலி வேதனை
நாங்கள் இந்த தோல்விக்கு தகுதியானவர்கள் தான். பேட்டிங்கில் எளிதாக எங்களுடைய விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எங்களது வெற்றியை நாங்களே தாரைவார்த்து விட்டோம் என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்களது வெற்றியை நாங்களே தாரை வார்த்து விட்டோம். கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து 25 முதல் 30 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். நாங்கள் நன்றாக பந்து வீசினோம் ஆனால் பீல்டிங் நன்றாக இல்லை நாங்கள் இந்த தோல்விக்கு தகுதியானவர்கள் தான். பேட்டிங்கில் எளிதாக எங்களுடைய விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம்.
நாங்கள் ஆட்டம் இழந்த எந்த பந்துமே விக்கெட்டை எடுக்க கூடிய பந்துகள் அல்ல. ஆனால் நாங்கள் பில்டர்களுக்கு நேராக அடித்து ஆட்டம் இழந்து விட்டோம்.
தொடரில் பிந்தைய கட்டங்களில் நல்ல நிலையில் இருக்க, நாங்கள் சில வெளியூர் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்."
இவ்வாறு விராட் கோலி கூறினார்.