வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசு
குளோபல் டி20 தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் அரை ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
டொரண்டோ,
கனடாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் குளோபல் லீக் டி20 என்ற பெயரில் நடைபெற்றது. இந்த தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடந்த இறுதிப்போட்டியில் இப்திகார் அகமது தலைமையிலான சர்ரி ஜாக்குவார்ஸ் அணியை கிரிஸ் லின் தலைமையிலான மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஷெர்பன் ரூதர்போர்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டநாயகன் விருது மட்டுமின்றி தொடர் நாயகன் விருதும் அவரே வென்றார். தொடர் நாயகன் விருது வென்ற அவருக்கு அமெரிக்க நாட்டில் அரை ஏக்கர் நிலம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
Next Story