இந்தியாவில் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர்: எப்போது தொடங்குகிறது ? வெளியான தகவல்.... ரசிகர்கள் உற்சாகம்


இந்தியாவில் இந்த ஆண்டு உலக கோப்பை தொடர்:  எப்போது தொடங்குகிறது ? வெளியான தகவல்.... ரசிகர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 22 March 2023 7:10 AM IST (Updated: 22 March 2023 7:18 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.இந்த தொடர் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உலக கோப்பை நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 19 அன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிக்காக ,சுமார் 12 இடங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை. ஆகிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன . தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story