உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கே ? எப்போது ? : ஐசிசி அறிவிப்பு


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கே ?  எப்போது ? : ஐசிசி அறிவிப்பு
x

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.


இந்த ஆண்டில் நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதிப் போட்டி, வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் நடைபெறும் என ஐசிசி ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே நீடிக்கின்றன. நியூசிலாந்து, இங்கிலாந்து உள்பட 5 அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.


Next Story