4-வது வெற்றியை பெறப்போவது யார்? குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்


4-வது வெற்றியை பெறப்போவது யார்? குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
x

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (சென்னை, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (கொல்கத்தா அணியிடம்) கண்டு 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக விளங்கி வருகிறது. பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியாவும், பந்து வீச்சில் ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், மொகித் ஷர்மாவும் வலுசேர்க்கிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (ஐதராபாத், டெல்லி, சென்னை அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியை (பஞ்சாப் அணியிடம்) பெற்று நல்ல நிலையில் உள்ளது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (204 ரன்கள்), ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயரும், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (20 விக்கெட்), ஆர்.அஸ்வின், டிரென்ட் பவுல்ட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

4-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக வரிந்து கட்டும் இந்த மோதலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிப்பது கடினமானதாகும். அதேநேரத்தில் உள்ளூர் சூழலில் ஆடுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனலாம்.


Next Story