இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் சமனில் முடிந்தது


இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் சமனில் முடிந்தது
x
தினத்தந்தி 22 July 2023 1:42 PM GMT (Updated: 22 July 2023 1:48 PM GMT)

டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

டாக்கா,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷமிமா சுல்தானா, பர்கானா ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். இதில் சுல்தானா 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய நிகர் சுல்தானா 24 ரன், ரிது மோனி 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பர்கானா சதம் அடித்து அசத்தினார். இறுதியில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய பெண்கள் அணி விளையாடியது.

தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா , ஷாபாலி வர்மா களமிறங்கினர். ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா , ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார்.. நிலைத்து ஆடிய மந்தனா அரைசதம் அடித்து 59 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஹர்லீன் தியோல் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது.

ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ,மேக்னா சிங் 3வது பந்தில் கேட்ச் முறையில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் சமனில் முடிந்தது


Next Story