சாம்பியன்ஷிப்பை வெல்ல சிறந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். - சேவாக் டுவீட்


சாம்பியன்ஷிப்பை வெல்ல சிறந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்க வேண்டும். - சேவாக் டுவீட்
x

Image Courtesy : ICC 

தினத்தந்தி 11 Jun 2023 10:22 PM IST (Updated: 11 Jun 2023 10:23 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன்ஷிப்பை வெல்ல சிறந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்க வேண்டும் என இந்தியா முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில், இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின. கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சற்று நிலைத்து நின்ற ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷர்துல் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சாம்பியன்ஷிப்பை வெல்ல சிறந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்க வேண்டும் என இந்தியா முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். அவர்கள் தகுதியான வெற்றியாளர்கள். இடது கை பேட்ஸ்மேன்கள் பலமான தாக்குதலுக்கு எதிராக அஸ்வினை விலக்க முடிவு செய்தபோது இந்தியா மனதை இழந்துவிட்டது.. மேலும் டாப் ஆர்டர் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். சாம்பியன்ஷிப்பை வெல்ல சிறந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்க வேண்டும்.


Next Story