ஆடுபுலி ஆட்டம் - ஏணிக்கட்டம்
புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு
தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு.
இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.
இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.
Related Tags :
Next Story