இருக்கை வசதியின்றி தரையில் அமர்ந்திருக்கும் மக்கள்
இருக்கை வசதியின்றி தரையில் அமர்ந்திருக்கும் மக்கள்
திருப்பூர்
திருப்பூர்
கலெக்டர் அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த சேவை மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சேவை மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உட்கார இருக்கை வசதி இல்லை. இதனால் தரையில் அமா்ந்துள்ளனர். குறிப்பாக இங்கு முதியவர்களும், புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பத்திற்காக கைக்குழந்தைகளுடன் பெற்றோா்களும் வருகின்றனர். இருக்கை வசதி இல்லாததால் தரையிலும் அமர முடியாமல் முதியவர்கள் தவிக்கின்றனர். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story