நாமக்கல் மாவட்டத்தில் தபால்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்-நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் தபால்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்-நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது
x
தினத்தந்தி 10 Aug 2022 11:51 PM IST (Updated: 11 Aug 2022 4:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தபால்துறை ஊழியர்கள் 730 பேர் கலந்து கொண்டனர். இதையொட்டி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல்:

வேலைநிறுத்தம்

தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நாடு முழுவதும் நேற்று தபால் துறை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தபால் துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் கிராமபுறங்களில் உள்ள கிளை தபால் நிலையங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. நகர்பகுதிகளிலும் ஒருசிலர் மட்டுமே பணிக்கு வந்து இருந்ததால் தபால் நிலையங்களில் வழக்கம்போல் நடைபெறும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் காரணமாக நாமக்கல் தலைமை தபால் நிலையத்தில் தபால் மூட்டைகள் பிரிக்கப்படாமல் இருந்ததை காண முடிந்தது.

ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் தபால் துறையில் மொத்தம் 782 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் 730 பேர் கலந்துகொண்டனர். மீதமுள்ள 52 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். இதனால் தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. தபால் நிலையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனிடையே தபால் நிலைய ஊழியர்கள் சார்பில் நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கோட்ட செயலாளர்கள் பாலகணேஷ், துரைசாமி, கோட்ட தலைவர் வெள்ளையன், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராமபுற தபால் ஊழியர்களுக்கு இலாகா அந்தஸ்து மற்றும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story