அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் - பண்ட், ஷ்ரேயாஸை மறைமுகமாக சுட்டிக்காட்டிய டிராவிட்
அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என ஷ்ரேயாஸ், ரிஷப் பண்டை தலைமை பயிற்சியாளர் டிராவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 எனவும், ஒருநாள் தொடரை 3-0 எனவும் இழந்து மோசமான தோல்வியடைந்தது.
குறிப்பாக, நேற்று நடந்த 3-வ கடைசி ஒருநாள் போட்டியில் நடுக்கள வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் மோசமான தோல்விக்கு பின்னர் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டிராவிட், அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்படவேண்டும் என ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யரை மறைமுகமாக சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பாக டிராவிட் கூறுகையில், நடுக்கள வீரர்களுக்கு (ரிஷப், ஷ்ரேயாஸ்) நாங்கள் தொடர்ச்சியான வாய்ப்பையும், பாதுகாப்பையும் (அணியில் இடம்பெறும்) கொடுக்க விரும்புகிறோம். அந்த வாய்ப்பையும் பாதுகாப்பையும் கொடுத்த உடன் நான் அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். நீங்கள் இந்த அளவிலான போட்டிகளில் விளையாடும்போது மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடும்போது மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். அது கட்டாயம் அவசியம் தேவையான ஒன்று’ என்றார்.
Related Tags :
Next Story