அதீத நம்பிக்கையால் அந்த பந்தை அடித்தேன்: 2007 டி20-ஐ நினைவுகூரும் மிஸ்பா
2007 டி20-ல் தான் எதிர்கொண்ட கடைசி பந்து குறித்து மிஸ்பா உல் ஹாக் நினைவுகூருகிறார்.
கராச்சி,
2007-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி-இன் முதல் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
14 ஆண்டுகளுக்கு முன்பு, டோனி தலைமையிலான இளம் இந்திய அணியினர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர். கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் பக்கம் ஆட்டம் இருந்த நிலையில், மிஸ்பா உல் ஹாக்கின் அதிரடி பேட்டிங்கால் இந்திய அணிக்கு சறுக்கல் ஏற்பட்டது.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பாகிஸ்தானை வெற்றிக்கு அருகில் கொண்டுசென்ற மிஸ்பா, தவறுதலான ஷாட்டின் மூலம் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்தியா கோப்பையை உச்சிமுகர்ந்தது. அந்த போட்டியில் மிஸ்பா 38 பந்துகளில் 4 சிக்சருடன் 43 ரன்களை எடுத்திருப்பார். இந்த போட்டி குறித்தும், அவரின் கடைசி எதிர்கொண்ட பந்து விக்கெட்டானது குறித்தும் மிஸ்பா தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
”நான் எனது பேட்டிங்திறனில் அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். குறிப்பாக ஸ்கூப் ஷாட்டை ஆடுவதில் சிறந்து விளங்கினேன். அந்த தொடர் முழுவதும் இத்தகைய ஷாட்டால், பவுண்டரிகளை எடுத்தேன். அதனாலேயே, நான் அந்த ஷாட்டை ஆட முயற்சித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அது விக்கெட்டில் முடிந்தது. நான் மிகவும் நம்பிக்கையுடன் அந்த ஷாட்டை தவறாக அடித்துவிட்டேன்”. இவ்வாறு மிஸ்பா கூறினார்.
Related Tags :
Next Story