லதா மங்கேஷ்கர் மறைவு; கைகளில் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
ஆமதாபாத்,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது இந்தியாவின் 1,000-வது ஒரு நாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்ததையொட்டி, நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இந்திய அணி வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து மைதானத்தில் களமிறங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story