சோகமான நாள் நண்பர்களே...பொல்லார்டை காணவில்லை...கலாய்த்த பிராவே...!
காணவில்லை என்ற போஸ்டரை பகிர்ந்து பொல்லார்டை டுவைன் பிராவே கலாய்த்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்,
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் வருபவர்கள் பொல்லார்டு, டுவைன் பிராவே ஆவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். மைதானத்தில் எதிர் எதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து மைதானத்தில் விளையாடி மைதானத்தில் ரசிகர்களுக்கிடையே பெரும் பங்கை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், பொல்லார்டை காணவில்லை என்ற போஸ்டரை இண்ஸ்டாகிராமில் பரிந்து டுவைன் பிராவே கலாய்த்துள்ளார். அந்த பதிவில், இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. எனது சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை நண்பர்களே, உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் தயவு செய்து எனக்கு இன்பாக்ஸ் செய்யவும் அல்லது போலீசில் புகார் செய்யவும் என்றும் அதனுடன் சிரித்த படங்களை சேர்த்து பகிர்ந்துள்ளார்.
Related Tags :
Next Story