ஐபிஎல் : சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : Twitter @IPL
x
Image Courtesy : Twitter @IPL
தினத்தந்தி 8 May 2022 7:07 PM IST (Updated: 8 May 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை,

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி  அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது  இடத்தில் உள்ளது. அதே போல சென்னை அணி 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Next Story