பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு அணி? - பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை..!!


Image Courtesy : BCCI / IPL
x
Image Courtesy : BCCI / IPL
தினத்தந்தி 13 May 2022 3:40 PM IST (Updated: 13 May 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. 18 புள்ளிகளை பெற்று குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுள்ளது. அதே போல் 16 புள்ளிகளில் இருக்கும் லக்னோ அணியும் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.

மீதம் இருக்கும் 2 இடங்களுக்காக ராஜஸ்தான், பெங்களூரு, ஐதராபாத், பஞ்சாப் அணிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு  நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு  - பஞ்சாப்  அணிகள் மோதுகின்றன.

புள்ளிபட்டியலில் 14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிடும்.

அதேநேரத்தில் 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும் பிற அணிகளின் முடிவை பொறுத்தே அந்த அணியின் பிளே ஆப் வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.


Next Story