சிஎஸ்கே-வில் தொடர விரும்பவில்லை எனில் தோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் -கவாஸ்கர்
சென்னை அணியில் தோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு உள்ளதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, நடப்பு சாம்பியனான சென்னை அணி 13 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.
இந்த சீசனின் தொடக்கத்தில் அணியின் கேப்டன் பதவியை ஜடேஜா-விடம் கொடுத்த தோனி அணியின் தொடர் தோல்வி காரணமாக மீண்டும் கேப்டன் பொறுப்பை எடுத்து கொண்டார்.
இந்த நிலையில் சென்னை அணியில் தோனி மேலும் சில ஆண்டுகள் தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து அவர் கூறுகையில், "நாம் மீண்டும் தோனியை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அணியில் அவரை ஒரு வீரராக தொடர்ந்து பார்ப்போமா அல்லது வேறு பொறுப்புகளில் பார்ப்போமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால் இனி வரும் காலங்களில் அணியில் அவர் ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு அணியில் தொடர்வதில் விருப்பம் இல்லை என்றால் அவர் மீண்டும் கேப்டன் பதவியை திரும்பப் பெற்றிருக்க மாட்டார் " என கவாஸ்கர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story