"ஒப்பன் பாக்ஸ் டெலிவரி" - பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நலன் மற்றும் நம்பிக்கையை பாதுகாக்கும் திட்டம்


ஒப்பன் பாக்ஸ் டெலிவரி - பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் நலன் மற்றும் நம்பிக்கையை பாதுகாக்கும் திட்டம்
x

இ-காமர்ஸ் என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இப்போது மாறி வருகிறது. இந்த சமயத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய ஏராளமான தயாரிப்புகளை இனிமையான ஷாப்பிங் அனுபவம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் வலைதளமாக மாறி இருக்கிறது. இருந்தாலும் கூட ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு புதிதாக வருபவர்கள் அல்லது அதிக மதிப்பு கொண்ட பொருட்களை வாங்குபவர்கள் தங்கள் வாங்கக்கூடிய அந்த தயாரிப்பு மீதான நம்பகத்தன்மை அத்துடன் அந்த பொருளை ஆர்டர் செய்து சரியான பொருளை பெறுகிறோமா என்ற நம்பிக்கை குறித்த சந்தேகங்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இது வாடிக்கையாளர் நலன்களையும் அவர்கள் பொருட்களை வாங்குவதற்கான வழிமுறைகளில் உள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் வகையிலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முயற்சியாகும்.

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கக்கூடிய விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் மற்றும் பெரிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆகியவற்றை பெறுவதில் உள்ள மன அச்சத்தை பிளிப்கார்ட் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. அந்த வகையில் டெலிவரி செய்யாத பொருட்கள், தவறான வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்படுவது மற்றும் டெலிவரியே செய்யப்படாதது போன்ற வாடிக்கையாளர்கள் சங்கடங்களை குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் கணக்கிற்கான பாதுகாப்பு, விருப்பப்படி கட்டணம் செலுத்தும் வசதிகள், பாதுகாப்பான பேக்கேஜிங் முறை, சரியான நேரத்தில் டெலிவரி செய்வது ஆகிய அனுபவங்களை ஒன்றிணைந்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதின் மூலமாக முதல்முறையாக ஷாப்பிங் செய்பவர்களும் பல ஆண்டுகள் ஷாப்பிங் செய்த அனுபவம் பெறுபவர்களாக உணரச் செய்கிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும், அவர்களுடைய இனிமையான ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்யும் வகையிலும் பிளிப்கார்ட் நிறுவனமானது ஒப்பன் பாக்ச் டெலிவரி என்ற டோர் டு டோர் டெலிவரி முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுமையான டெலிவரி முறையின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்களை பெறுவதற்கு முன்பே அதை சோதனை செய்து பார்ப்பதற்கு வழிவகை செய்கிறது. அதன் மூலம் தாங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் முறையாக தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதையும், அந்தப் பொருள் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொண்ட பின்னர் அந்த பொருளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் அளிக்கிறது.

இந்த ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற முறை எப்படி செயல்படுகிறது..?

வாடிக்கையாளர் தனக்கு விருப்பமான பொருளை ஓபன் பாக்ஸ் டெலிவரி முறையை பயன்படுத்தி பெறுவதற்கு ஆர்டர் செய்தவுடன் அவருக்கு குறிப்பிட்ட ஒரு பின் நம்பருடன் தகவல்கள் அளிக்கப்படும். அதன் பின்னர் அவர் ஆர்டர் செய்த பொருள் தயாரானவுடன் அவருக்கு அந்த பொருள் கிடைப்பதற்கு முன்னதாக தகுந்த குறுஞ்செய்தி மூலம் அந்த பொருள் டெலிவரி செய்யப்படுவதற்கான தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். அதன்படி பிளிப்கார்ட் டெலிவரி பார்ட்னர் அந்த பொருளை வாடிக்கையாளருடைய வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து சேர்ப்பார். ஓபன் பாக்ஸ் டெலிவரி மூலம் அந்த பொருளை வாடிக்கையாளர் பெற தேர்வு செய்த காரணத்தால் டெலிவரி பார்ட்னர் முன்னிலையில் வாடிக்கையாளர் தான் ஆர்டர் செய்த பொருளுக்கான பேக்கிங்கை அதனுடைய இரண்டு அடுக்கு பேக்கிங் முறைகளை அகற்றி தான் ஆர்டர் செய்த பொருள் தனக்கு சரியாக வந்துள்ளதா என்பதை சோதித்து அறிந்து கொள்ளலாம். அதன் பின்னர் டெலிவரி பார்ட்னரிடம் வாடிக்கையாளர் அந்த பொருளுக்கான ஓடிபி எண்ணை அளிக்கலாம்.

வாடிக்கையாளர் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பொருளை ஆர்டர் செய்திருந்தால் பெட்டியை திறப்பதற்கு முன்பாகவே பணத்தை செலுத்தி விட வேண்டும். அல்லது கியூ-ஆர் கோடு முறையில் ஸ்கேன் செய்தும் பணத்தை செலுத்தி விடலாம். ஒருவேளை தாங்கள் ஆர்டர் செய்த பொருள் அல்லாமல் வேறு பொருளாக இருக்கும் பட்சத்தில் அதை டெலிவரி பார்ட்னரிடமே திருப்பி அளித்து விட்டு, அந்த பொருளுக்கான பணத்தை நீங்கள் எவ்வாறு செலுத்தினீர்களோ அந்த வகையிலேயே பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ள முடியும். வாடிக்கையாளர் பொருளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த பொருளுக்கான பேக்கேஜிங்கை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த பொருளை பத்து நாட்களுக்குள் ரிட்டர்ன் செய்ய விரும்பினால், ரிட்டர்ன் செய்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுடைய நலனுக்காக அளிக்கக்கூடிய இந்த ஓபன் பாக்ஸ் டெலிவரி முறையானது எந்த விதமான கட்டணங்களும் இல்லாமல் வழங்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருளை அவர்களுடைய முடிவின்படி வாங்குவதற்கு வழிவகை செய்கிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர் பெட்டியை திறந்து பார்த்த பிறகு அந்தப் பொருள் பிடிக்கவில்லை என்றால் அதை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஓபன் பாக்ஸ் டெலிவரி என்பது பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்காக அளிக்கக்கூடிய பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் இல்லாத மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை பெறுகிறார்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது மிகவும் பிரபலமாக மாறி வருவதுடன் விரைவான வளர்ச்சியையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனமானது தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய நம்பிக்கையையும், திருப்தியையும் பெறுவதற்காக பாடுபட்டு வருகிறது. ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற வாடிக்கையாளர்கள் திருப்தியை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தின் மூலமாக அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதற்கும், சரியான தயாரிப்பை பெறும் உத்தரவாதத்திற்கும், இ-காமர்ஸ் வணிக தளம் மூலம் பிளிப்கார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும் வாடிக்கையாளர் மீது தகுந்த அக்கறை செலுத்துவதன் மூலமாக பிளிப்கார்ட் நிறுவனமானது இந்திய மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஆர்டர் அளித்து பொருட்களை வாங்குவதில், நம்பிக்கை மிகுந்த ஆன்லைன் வணிகத்தளமாக விளங்கி வருகிறது.