தங்கம் சேதாரம் ஆகவே ஆகாது...100 பொய் சொல்வாங்க... வெளுத்து வாங்கும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர்


தங்கம் சேதாரம் ஆகவே ஆகாது...100 பொய் சொல்வாங்க... வெளுத்து வாங்கும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர்
x

பட்டிமன்றம் ராஜாவின் சிறப்பு நேர்காணலில் லலிதா ஜுவல்லரி உரிமையாளரின் தொழில் ரகசியங்கள்.

தந்தி நேர்காணலில் லலிதா ஜுவல்லரி உரிமையாளரான கிரண்குமார் தனது தொழிலின் ஆரம்பகால பயணம் முதல்கொண்டு வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றி மனம் திறந்து பட்டிமன்றம் ராஜாவின் சிறப்பு பேட்டியில் பேசியிருக்கிறார்.

தங்க நகையை ஹோல்சேல் விற்பனை விலையிலேயே வாடிக்கையாளருக்கு நாங்கள் கொடுக்கிறோம்.தள்ளுபடி சலுகை போன்ற வியாபார யுக்திகளால்

வியாபாரிகள் வாடிக்கையாளரை கவர்வது போல நாங்கள் ஒரு போதும் செய்வதில்லை.பொதுவாக 916 ஹால்மார்க் தங்க நகைகளை வியாபாரிகள் 8% அல்லது 12% போன்றவைகளுக்கும் மேலாக சேதாரம் விலையிற்கு கொடுக்கின்றனர் ஆனால் நாங்கள் வளையல் மற்றும் செயின் போன்ற தங்க நகைகளுக்கு கூட சேதாரம் 2% அல்லது 3% தான் கொடுக்கிறோம் என்கிறார் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார்.

அன்று 65கிராம் முதலீட்டால் இன்று வருடம் பத்தாயிரம் கோடி மதிப்பீடான வருமானம் கொண்ட தங்க நகை வியாபாரியாகி இருக்கிறேன் .எனது ஆரம்ப பயண வாழ்க்கை ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தான் தொடங்கியது.பசி பணம் தான் என்னுடைய குருவாக இருந்தது.எனது தாயின் வளையல் தான் அந்த 65கிராம் முதலீடு என மனம்திறந்து நேர்காணலில் உரையாடினார்.