தனிஷ்க் இந்த விழாக்காலத்தில் சோழா்களின் பெருமையைக் கொண்டாடுகிறது|


தனிஷ்க் இந்த விழாக்காலத்தில் சோழா்களின் பெருமையைக் கொண்டாடுகிறது|
x

க்களின் மீது பேரன்பும், கருணையும் கொண்ட பேரரசு, கம்பீரமிக்க போர்வீரன் மனோபாவம் பெயர் சொல்லும் செல்வாக்கு. வலுவாக ஊன்றியிருக்கும் கலாச்சார வளம். பொற்காலத்தின் செழுமை இவையனைத்தும் சோழப் பேரரசின் மறுப்பெயராக சொல்லுமளவிற்கு பொருந்தமானவை, கடல் கடந்து வெற்றிக்கொடி நாட்டிய மாபெரும் பேராசைக் கொண்டாடும் வகையிலும், அதன் கவர்ந்திழுக்கும் தெய்வீசு மகிமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் டாடாவின் ஒரு அங்கமான இந்தியாவின் மாபெரும் ஜுவல்லரி விற்பனை பிராண்டான தனிஷ்க் த சோழா (The Chozha) என்னும் பிரத்யேக நகைத்தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.

மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் 3 முக்கிய அம்சங்களாக விளங்கியவற்றின் மீது உண்டான ஈர்ப்பு மற்றும் பிரம்மாண்டத்தினால் கவரப்பட்டு ஒரு கம்பீரமான நகைத்தொகுப்பாக த சோழா வடிவமைக்கப்பட்டுள்ளது நுணுக்கமான கற்சிற்பங்கள் மற்றும் கலைத்திறனை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் வெளிப்படுத்தும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சோழர்களின் அசாத்தியமான கோயில் கட்டடக்கலையானது சோழர்களின் கலைத்திறனையும் கலாசார் ஆழத்தையும் மறக்க இயலாத சோழ பாரம்பரியத்தையும் வெளிக்காட்டுகிறது. சங்க காலப் பாடல்களும் இலக்கியங்களும் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் அறிவையும் ஆழ்ந்த ஞானத்தையும் குறிப்பிடும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் தாக்கம் இன்றும் தமிழ் இலக்கியத்தில் நம்மால் உணர முடிகிறது. சோழர்களைக் குறிப்பிடும் முத்திரைப்பதித்த நாணயங்கள் & நகைகளின் அழகியலுடன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் வாழ்வை துடிப்புடன் வைத்திருக்க செய்யும் தெய்வீக முத்திரைகள் என அனைத்தையும் சோழர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆபரணங்களுடன் கூடிய சிற்பங்களை உள்ளடக்கிய சோழர் கால வெண்கலப் படைப்புகள் அச்சிற்பங்களுக்கு உயிரூட்டுகின்றன. இன்றைய புதுமைப்பெண்களைப் போலவே புத்திசாலித்தனம், வீரம், கருணை உள்ளிட்ட குணங்களை வெளிப்படுத்திய சோழ வம்சத்தின் அசைக்க முடியாத பெண் ஆழுமைகளில் இருந்து பெறப்பட்டவை.

ஒருபுறம் கோபுரங்களின் நுணுக்கமான சிறு சிறு அழகியல் அம்சங்கள் & இன்னொரு பக்கம் தமிழி மொழியில் அமைந்த கல்வெட்டுகளைத் தழுவி மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட சோழ சாம்ராஜ்யத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் நகைத்தொகுப்பாக தனிஷ்க்கின் 'த சோழா அமைந்துள்ளது தனிஷ்க்கின் 'சோழா கலெக்ஷன் பொற்காலத்தின் தமிழ் எழுத்துருக்கள், மெய் மறக்கச் செய்யும் கட்டடக்கலையைத் தழுவிய என்க்ரேவிங்குகள், நாணயத்தின் நிழல் பிம்பங்கள் என்று இந்த சுலெக்ஷன் உண்மையிலேயே பெருமையாக உணர வைக்கும், இதனை அணிபவரை உடனடியாக பொற்காலத்திற்கு அழைத்துச்

செல்லும். ஒரு அட்டகாசமான நகைத்தொகுப்பாகும். மிகுந்த சிரத்தையுடன், மிக அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்ட கைவினைத்திறன் சோழர்களின் ஆட்சிப் பெருமைகளை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தன்னை ஒரு கம்பீரமான ஆளுமையாக, வரலாற்றின் அங்கமாக நினைத்துப் பார்க்கும் இன்றைய புதுமைப் பெண்களுக்கு, 'த சோழா நகைத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு நகையும் ஒரு பிரத்தியேகமான கதையைக் கொண்டுள்ளது; பிரம்மாண்டமான சோழ வரலாற்றின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது;

காண்பவர்களை பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட வேலைப்பாடுகள் மிக்க இந்த நகைத்தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பேசிய திரு. அருண் நாராயணன், வைஸ் பிரஸிடெண்ட் கேட்டகரி, மார்க்கெட்டிங் & ரீடெய்ல் பிரிவு, தனிஷ்க், டைட்டன் கம்பெனி லிமிடெட் (Mr. Arun Narayan, VP Category, Marketing & Retail, Tanishq, Titan Company Limited], 'நம்முடைய பாரம்பரியமிக்க வரலாறு மற்றும் தொன்மையான சுலாச்சாரம் இவை இரண்டும் மக்களோடு மக்களாக நம்முடன் ஒன்றிணைந்து இருக்கிறது. இதுவே நமக்கான அடையாளத்தையும், பெருமையையும் கொடுக்கிறது. அதனால்தான் நமது வரலாற்றில் உண்மையிலேயே பொற்காலமாக போற்றப்படும் காலக்கட்டத்தின் கட்டிடக்கலை, கலை மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றினால் ஈர்க்கப்பட்டு, அதன் வெளிப்பாடாக இந்த பிரத்தியேக நகைத் தொகுப்பை இந்த பண்டிகைக் காலத்தில் அர்ப்பணிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். தனிஷ்க்கின் 'சோழா, நகைத்தொகுப்பு, நம்முடைய செழுமையான பாரம்பரியத்தின் கதைகள், சின்னங்கள் மற்றும் சாதனை மனிதர்களை உயிர்ப்பிக்கும் மிக நேர்த்தியான மற்றும் அசல் நகைகளின் தொகுப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

தனிஷ்க் குறித்து

தனிஷ்க் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நகை பிராண்ட் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் தனிஷ்க், டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகும். நுணுக்கமான வடிவமைப்பு, மனதைக் கவரும் பிரத்தியேகமான டிசைன்கள், மிகவும் உயர்ந்த மற்றும் உத்தரவாதமுள்ள தரம் ஆகியவற்றுடன் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நற்பெயர் பெற்றுத் திகழ்கிறது தனிஷ்க் இந்தியப் பெண்களின் நகைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பாரம்பரிய மற்றும் தற்கால பாணிகளைப் பிரதிபலிக்கும் ஏற்றவாறு நகைகளை வடிவமைத்து விற்பனை செய்யும் தனிச்சிறப்பு மிக்க ஒரே நகை நிறுவனம் தனிஷ்க் ஆகும் தற்போது 220 நகரங்களில் 400 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் தனிஷ்கிற்கு உள்ளன.