எனக்கு திருமணமா? தமன்னா விளக்கம்

நடிகை தமன்னாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமன்னா தற்போது இன்ஸ்டாகிராமில் திருமணம் என்பது வதந்தி என்றும் குறிப்பிட்டு உள்ளார்.;

Update:2022-11-18 08:11 IST

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேன் என்று தமன்னா கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோர் மும்பை தொழில் அதிபரை மாப்பிள்ளையாக பேசி முடித்து இருப்பதாகவும் அவரை தமன்னாவுக்கும் பிடித்துள்ளதால் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் கூறப்பட்டது. திருமணம் நடக்க இருப்பதால் தமன்னா புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பேசினர். இதற்கு தமன்னா உடனடியாக மறுப்பு தெரிவிக்காமல் இருந்தார். இதனால் திருமண தகவல் உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டனர். இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமன்னா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தனது தொழில் அதிபர் கணவரை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டு அவரே ஆண் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். திருமணம் என்பது வதந்தி என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்