பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரூ.1,000 கோடி சம்பளமா? சல்மான்கான் விளக்கம்

16-வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இந்தி நடிகர் சல்மான்கான் ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு அவர் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.;

Update:2022-09-29 06:52 IST

இந்திய அளவில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்துள்ளது. இதனை இந்தி நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கினார். முந்தைய சீசன்களை போலவே 16-வது பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் சல்மான்கானே தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதற்கு சல்மான்கான் விளக்கம் அளித்து கூறும்போது, ''எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கொடுக்கப்படும் சம்பளம் குறித்து வெளியான தகவல் உண்மை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எனக்கு ரூ.1,000 கோடி சம்பளம் கிடைத்தால் இனிமேல் வேலை செய்ய வேண்டிய நிலைமை இருக்காது. சில நேரங்களில் கடுப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று தெரிவித்தும், அவர்களுக்கு வேறு ஆள் கிடைக்காமல் நானே தொகுத்து வழங்க வேண்டி உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்