51-வது படத்துக்கு தயாராகும் தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது தனது 50-வது படத்தில் நாயகனாக நடித்து, அவரே இயக்கியும் வருகிறார்.;

Update:2023-10-17 07:53 IST

தனுஷ் 2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். ஆடுகளம், அசுரன் படங்கள் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது தனது 50-வது படத்தில் நாயகனாக நடித்து, அவரே இயக்கியும் வருகிறார். இதில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த படத்தை முடித்து விட்டு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா டைரக்டு செய்யும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதிரடி சண்டை கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இதில் தனுஷ் ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா பெயர் அடிபடுகிறது. தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பான் இந்தியா படமாக எடுக்க உள்ளனர். தனுஷ் மேற்பார்வையில் தயாரிப்புக்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்