தமிழகத்தில் காற்று வாங்கும் திரையரங்குகள்: பல நகரங்களில் இரவுக்காட்சிகள் ரத்து

அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐ.பி.எல். சீசன் என்பதால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து காணப்படும்.

Update: 2024-03-09 09:33 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவுக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில திரையரங்குகளில் 5 பார்வையாளர்கள் கூட வரவில்லை என்பது ஏமாற்றம் தரும் உண்மை.

சமீபத்தில் வெளியான 'பிரமயுகம்', 'பிரேமலு', 'மஞ்சுமெல் பாய்ஸ்' உள்ளிட்ட மலையாளத் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த திரைப்படங்களால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை இருந்தது. அதனால் திரையரங்குளின் உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஐ.பி.எல். சீசன் என்பதால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து காணப்படும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது, திரையரங்குகளுக்கு கூட்டத்தை இழுக்கும் ஒரு கேம் சேஞ்சர் திரைப்படம் தேவைப்படுகிறது. தமிழ் சினிமா அதிசயங்களை நிகழ்த்தும் ஒரு திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ரஜினி நடிக்கும் 'வேட்டையன்', கமலின் 'இந்தியன் - 2', அஜித்தின் 'விடாமுயற்சி', விஜய் நடிக்கும் 'கோட்', சூர்யாவின் 'கங்குவா' உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்