அழகில்லாதவர், நடிக்கவும் தெரியாது - நடிகர் ஷாருக்கானை விமர்சித்த நடிகை

இந்தி நடிகர் ஷாருக்கானை பிரபல பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலூச் கடுமையாக விமர்சித்து உள்ளார்

Update: 2023-07-10 04:22 GMT

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஷாருக்கானை பிரபல பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலூச் கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''ஷாருக்கான் அழகானவர் இல்லை. ஒரு ஆணை பிடிப்பதற்கு அவரது தோற்றம் மட்டும் போதாது. நடவடிக்கை, பண்பு போன்ற குணநலன்களும் முக்கியம். ஷாருக்கானுக்கு இயல்பான ஒரு ஆணுக்குரிய தோற்ற அழகு இல்லை.

அதுமட்டுமன்றி ஷாருக்கானுக்கு நடிக்கவே தெரியாது. அவர் நல்ல பிசினஸ்மேன், தன்னை அசாதாரணமான மனிதரைப்போல் எப்படி முன்னிறுத்துவது, தனது படங்களை உலக அளவில் எப்படி வெற்றிபெற வைப்பது என்பதை நன்றாக அறிந்து இருக்கிறார்.

எனது கருத்து ஷாருக்கான் ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனாலும் மனதில் தோன்றியதை சொல்கிறேன்'' என்றார்.

இது ஷாருக்கான ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மஹ்னூர் பலூச்சை கண்டித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்