ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் மொட்டையடித்து ஈமக்கிரியை செய்தனர்

ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் மொட்டையடித்து ஈமக்கிரியை செய்தனர்

Update: 2016-12-13 22:30 GMT
ஜீயபுரம்,

தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஜீயபுரம் பகுதியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் காவிரி நீரில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஊர்வலத்தில் இந்து முறைப்படி இறுதி சடங்கில் செய்வது போல் கையில் தீச்சட்டியுடன் வந்திருந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டஅ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கோப்பு அ.தி.மு.க. கிளை சார்பில் கிளை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஒரு வார காலமாக தினமும் விளக்கேற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு படத்திற்கு முன்பு ஒப்பாரி வைத்தனர். நேற்று அதிகாலை 8-ம் நாள் காரியத்திற்காக உய்யகொண்டான் வாய்க்கால் பகுதியில் இருந்்து பிரியக்கூடிய புலிவலம் கொடிங்கால் வாய்க்காலின் தலைப்பு பகுதியில் கோப்பு, அயிலாப்பேட்டை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஒன்று கூடினார்கள். அங்கு 37 பேர் மொட்டையடித்து புரோகிதர் மூலம் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி இந்து முறைப்படி ஈமக்கிரியை செய்தனர். பின்னர் கோப்பு பாலத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, மாரியம்மன் கோவிலிலும் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்