வார்தா புயல் பாதிப்பு: திருவொற்றியூர் பகுதியில் அடுத்தடுத்து சாலை மறியல்

வார்தா புயலால் திருவொற்றியூர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர் குப்பத்தில் நேற்று புயலால் சேதம் அடைந்த 150 படகுகளுக்கு நஷ்ட ஈடு கோரி மீனவர்கள் சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2016-12-14 22:30 GMT

திருவொற்றியூர்

வார்தா புயலால் திருவொற்றியூர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர் குப்பத்தில் நேற்று புயலால் சேதம் அடைந்த 150 படகுகளுக்கு நஷ்ட ஈடு கோரி மீனவர்கள் சாலை மறியல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் சுனாமி குடியிருப்பில் புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மின்சாரம், குடிநீர் வசதி கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.

பெரிய காசிகுப்பம் பகுதியில் புயலால் சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எண்ணூர் விரைவு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவொற்றியூர் குப்பம் கிராமத்தில் ஏற்கனவே சாலை மறியல் நடந்து இருந்தது. இந்த நிலையில் திருவொற்றியூர் பகுதியில் மேலும் 3 இடங்களில் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம் நடந்ததால் வடசென்னை ஸ்தம்பித்தது. மறியல் நடந்த இடங்களுக்கு போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.

மேலும் செய்திகள்