ராமேசுவரம் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.23,92,658 வசூல்

ராமேசுவரம் கோவிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்து. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் தலைமையில் கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், பரமக்குடி உதவி ஆணையர் ராமசாமி, ஆய்வாளர் சுந்தரசு

Update: 2016-12-15 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்து. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் தலைமையில் கோவில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், பரமக்குடி உதவி ஆணையர் ராமசாமி, ஆய்வாளர் சுந்தரசுவரி, மேலாளர் லட்சுமிமாலா, தக்கார் பிரதிநிதி பண்டரிநாதன் ஆகியோரது மேற்பார்வையில் சூப்பிரண்டுகள் ககாரின்ராஜ், ராஜாங்கம், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச் செல்வன், நேர்முக உதவியாளர் கமலநாதன், காசாளர் ராமநாதன் உள்பட கோவில் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.23,92,658, தங்கம் 12 கிராம், வெள்ளி 950 கிராம் கிடைத்தது. இதை தவிர பல்வேறு வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 98 இருந்தன.

மேலும் செய்திகள்