ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் 103 பேர் மொட்டை அடித்து அஞ்சலி

ஜெயலலிதா மறைவு: அ.தி.மு.க.வினர் 103 பேர் மொட்டை அடித்து அஞ்சலி

Update: 2016-12-15 22:15 GMT
கொடுமுடி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அதன்படி ஈரோடு பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரா.மனோகரன் தலைமையில் 103 அ.தி.மு.க.வினர் நேற்று கொடுமுடி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள காவிரிக்கரையில் அமர்ந்து மொட்டை அடித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவரும் மோட்ச விளக்குகள் ஏற்றி காவிரி ஆற்றில் விட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு செல்வக்குமார சின்னையன் எம்.பி., முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, கொடுமுடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புதூர் கலைமணி, பேரூராட்சி முன்னாள் தலைவர் சரவணன், கூட்டுறவு வங்கி தலைவர் பரிமளா மணி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்