தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து தண்ணீரின்றி சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து தண்ணீர் இன்றி சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாடு அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அளவிலான மாநாடு அரியலூர

Update: 2016-12-16 22:05 GMT

தாமரைக்குளம்,

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து தண்ணீர் இன்றி சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அளவிலான மாநாடு அரியலூரில் நடந்தது. மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் சிவபுண்ணியம், பொருளாளர் சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில், கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், கட்சியினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டில் ஒன்றியச் செயலாளர்கள ஆறுமுகம், கிருஷ்ணன், அபிமன்னன், ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணம்

மாநாட்டில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விவசாயிகளிடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்