சேலத்தில் 20–ந் தேதி ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் அறிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசு சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்குவதை தவிர்த்திட கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட கோரியும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல

Update: 2016-12-17 22:45 GMT

சேலம்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்குவதை தவிர்த்திட கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட கோரியும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்தும் சேலத்தில் வருகிற 20–ந் தேதி காலை 10 மணிக்கு த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். எனவே சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தை சேர்ந்த த.மா.கா. நிர்வாகிகள், துணை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்